ABOUT PREVENTION OF DENTAL DISEASES AND MAINTENANCE OF GOOD ORAL HEALTH
|
|
ORAL HYGIENE INSTRUCTIONS FOR CHILDREN |
1. | Proper Brushing (Upper Teeth (Up down) then Lower Teeth (Down up). |
2. | Rinse mouth after every meals. |
3. | Night brushing essential.Till 8 yrs parents can guide and help them for
effective brushing. |
4. | Removal of impacted food Particles between the Teeth with the help of
dentalfloss,toothpicks (Parents can help) |
5. | Eat healthly foods which contains vitamins & Minerals such as Egg, Milk,
Fruits, Vegetables, Fish, Pulses and Green Leaves. |
6. | Avoid sticky foods such as Choclates, ice creams and cakes. |
7. | Use sugarefree chewing gums such as Orbit Happydent and Protex. |
8. | Incase of any dental problems (Bleeding gums cavities) Visit dentist
immediately. |
9. | Visit dentist once in 6 Months for healthy teeth and Gums. |
10. | A tooth which has come out of the socket can be reinserted and brought to the normal condition, if the tooth is brought to the dentist in a polythene bag containing ice cubes as early as possible. |
11. | Avoid habits such as tongue thrusting, thumbsucking and mouth breathing to have a beautiful smile and to prevent malocclusion. In case of such problems visit dentist immediately. |
|
|
ORTHODONTIC INSTRUCTIONS |
Now your are having one of the most modern appliance for correction of malaligned teeth.
These appliances consist of Brackets (Braces), arch wires, lock pins etc. Time to time more
sophisticated attachments are also used. Please take care of these appliances by observing following precautions:
|
1. | Never touch or disturb these attachments by finger, tongue, pencils, pen etc. |
2. | Never try to bite any things with the front teeth, even the softest food materials. |
3. | Never bite any hard food like toffee, chocolate, ice, maize, corn, biscuits, toast, all sorts
of nuts (Grams, Peanuts, Cashew, Almond). It is very difficult to mention the name of all
hard food stuffs which can break brackets, it is the responsibility of the child of judge,
and keep the appliances in its best form. |
4. | Never take aerated drinks i.e. Coke, Campa, Pepsi etc. During treatment as it may loosen
bonding of braces. |
5. | In case, any of the orthodontic material gets broken of comes out please keep it safely and
bring it alongwith on your next appointment. |
6. | In case the wire is broken or comes our and hurts the tongue or cheek, please don't try to
remove it, just keep a small piece of cotton these so that the wire does not hurt and more
& inform the doctor. |
7. | Avoid games which can cause trauma / injury to the front teeth i.e.Boxing, Basket Ball etc.
Please Co-operate for the best possible treatment. |
|
|
|
|
STEPS FOR HEALTHY TEETH AND GUMS |
1. | Brush your teeth before going to bed. |
2. | From 6 months of age, take children regularly to dentist once in 6
months. |
3. | Food particles impacted between teeth should be removed within half
an hour. (by rinsing, brushing or flossing) |
4. | To avoid losing the teeth due to decay, visit the dentist when the early
signs of decay appear. (discolouration, pit, sensitivity & food impaction) |
5. | To avoid losing the teeth due to decay, visit the dentist when the early
signs of gum diseases appear. (bleeding or swelling in gums, bad breath,
hard deposits) |
6. | Tooth lost due to any reason should be replaced within 3 - 4 months. |
7. | Removable denture / removable orthodontic appliance should be
removed and cleaned after every meals. |
8. | Teeth should be cleaned (scaling) in the dental clinic once in 6 months. |
9. | If any problem arises in previously filled tooth (pain / fractured filling),
visit the dentist immediately. |
10. | If there is possibility, try to save the tooth at any cost rather than
getting it extracted. |
|
|
பல் தொந்தரவை தவிர்க்க |
1. | இரவில் பல் துலக்குதல். |
2. | ஒவ்வொரு உணவுக்குப் பின் வாய் கொப்பளித்தல். |
3. | பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை அகற்றுதல்.
(பல் குத்தி, பல் இடுக்கு சுத்தம் செய்யும் பிரஷ் & நூல்) |
|
|
|
|
குழந்தைகளுக்கான பற்களின் பராமரிப்பு |
1. | முறையாக பல் துலக்குதல். (மேல்பற்கள் : மேலிருந்து கீழ், கீழ்பற்கள் : கீழிலிருந்து மேல்) |
2. | ஒவ்வொரு உணவுக்குப் பின் வாய் கொப்பளித்தல். |
3. | இரவு உணவுக்குப்பின் பல் துலக்குதல். |
4. | பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை பெற்றோரின் உதவியுடன் பற்குச்சி மற்றும் நூல் (டென்டல் பிளாஸ்) |
5. | சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல். (பால், முட்டை, பழங்கள், பச்சை காய்கறிகள், மீன், பருப்பு மற்றும் கீரை வகைகள்) |
6. | ஒட்டும் தன்மை கொண்ட உணவு வகைகளை தவிர்த்தல். (சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக்) |
7. | சுகர் ஃப்ரீ சூயிங்கம் உபயோகித்தல். (ஆர்பிட், ஹேப்பிடென்ட், புரோட்டக்ஸ்) |
8. | பல் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்பட்டால் உடனே பல் மருத்துவரை அணுகுதல். |
9. | ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளைப் பெற ஆறுமாத குழந்தையிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுதல். |
|
|
பற் கூச்சம் |
குளிர்ந்த, சூடான மற்றும் புளிப்பான உணவுப் பொருட்களை சாப்பிடும் போது பற் கூச்சமோ, வலியோ உண்டாகலாம்.
இதற்கான காரணங்கள்
பொதுவாக நமது பல்லில் உள்ள டென்டைன் என்ற கூச்சம் உள்ள பகுதியை சுற்றி வெளிப்புற பல்லில் எனாமலும், வேர் பகுதியில் சிமெண்டம் என்ற கடினபகுதிகளினால் மூடப்பட்டுள்ளது. பல்தேய்தலின் விளைவாக இந்த டென்டைன் பகுதி வெளிப்படுகிறது. அதனால் பற்கூச்சம் ஏற்படும்.
|
|
இதன் வகைகளும் அதற்கான காரணங்களும் |
|
A - அப்ரைசன் (பல்லில் பக்கவாட்டுப்பகுதி) |
| 1. | மிருது இல்லாத பற்பொடி மற்றும் கடினமான பல்துலக்கும் பிரஷ். |
| 2. | கடுமையாக நீண்டநேரம் பக்கவாட்டில் பற்களை சுத்தம் செய்தல். |
|
B - அட்ரீசன் (பல்லின் மேல் பகுதி - அரைக்கும் பகுதி) |
| 1. | வெற்றிலை பாக்கு உபயோகித்தல் |
| 2. | நகம் கடித்தல் |
| 3. | மன அழுத்தம் மற்றும் இரவிலும் நம்மை அறியாம்ல் பற்களை நற, நறவென கடித்துக் கொள்ளுதல். |
| 4. | தூசு நிறைந்த பணியிடங்களில் பணிபுரிதல். |
| 5. | வயது முதிர்ச்சி |
|
C - எரோசன் |
| 1. | அமிலத்தன்மை (அசிடிட்டி) |
| 2. | அடிக்கடி ஏற்படும் வாந்தி |
| 3. | சிட்ரஸ் நிறைந்த பழங்களை அதிகநேரம் வாயிலிலே வைத்திருத்தல். |
| 4. | கார்பன்டை ஆக்ஸைடு நிரப்பப்பட்ட குளிர்பானங்களை அதிகமாக அருந்துதல். |
|
மேற்கூறிய காரணிகளை தவிர்ப்பதன் மூலம் பற்கூச்சத்தை தடுக்கலாம். |
|
|
|
|
பல் செட் அணிந்திருப்போர் கவனிக்க வேண்டியவை |
1. | பல்செட் அணிந்த முதல் வாரத்தில் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிறிது கடினமாக இருக்கும். அதற்காக கவலைப்பட தேவையில்லை. |
2. | முதல் வாரத்தில் சத்தமாக செய்தித்தாள் வாசித்தும், கடினமான சொற்களைத் திரும்பத்திரும்ப பேசியும் பழகவேண்டும். |
3. | உணவினை முன்பற்களைக் கொண்டு கடிக்கக்கூடாது. கடினமாக பொருட்களை சிறு துண்டுகளாக்கி பின்பற்களைக் கொண்டும், இரண்டு பக்கமும் சமமாகவும் கடித்து உண்ண வேண்டும். ஒரு பக்கத்தை மட்டும் உபயோகித்துப் பழகக் கூடாது. |
4. | பல் செட் வாயில் போடாத நேரங்களில் குளிர்ந்த தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும். |
5. | இரவில் பல்செட்டை கழற்றி வைத்து விட வேண்டும். ஏனெனில் ஈறுகளுக்கு 6-8 மணி நேரம் ஓய்வு தேவை. இவ்வாறு கழற்றி வைத்தால் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். |
6. | ஒவ்வொரு வேளை உணவிற்குப் பின்னும் பல் செட்டை கழற்றிக் கழுவ வேண்டும். |
7. | பல்செட்டை காலையிலும், இரவிலும் பிரஷ்ஷையும், பேஸ்டையும் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தது 3 நாட்களுக்கு ஒரு முறை அதற்கென உள்ள பிரத்தியோக பொடியை உபயோகிக்க வேண்டும். ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து அதில் பல்செட்டை இரவு முழுவதும் போட்டு வைத்து காலையில் பிரஷ்ஷைக் கொண்டு சுத்தம் செய்துவர பல்செட் வாடையோ, கறையோ இல்லாமல் இருக்கும். |
8. | பல்செட் பிடிப்பாக இருப்பதற்கு உள்ள பிரத்தியோக பொடியை பல்செட்டின் உள்பக்கம் தூவி தண்ணீர் தெளித்து பின் வாயில் அணிந்து கொண்டால் நீண்ட நேரம் நல்ல பிடிப்புடன் இருக்கும். |
9. | புதிதாக பல்செட் போட்டவர்கள் அதற்கு அடுதத நாள், ஒரு வாரத்திற்கு பின், ஒரு மாதத்திற்குப்பின் பல் மருத்துவரிடம் சென்று அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். |
|
|
பிக்ஸட் கம்பி அணிந்திருப்போர் நினைவில் கொள்ள வேண்டியவை |
1. | பல்லில் ஒட்டப்பட்டுள்ள கம்பியை கைவிரல், நாக்கு, பேனா மற்றும் பென்சிலால் தொடவோ, தொந்தரவோ செய்யக்கூடாது. |
2. | மிக மென்னையான உணவைக்கூட முன் பல்லினால் கடிக்கக் கூடாது. |
3. | ஐஸ், மக்காச்சோளம், பிஸ்கட், வேர்க்கடலை, முந்திரிபருப்பு போன்ற கடினமான மற்றும் ஒட்டும் தன்மையுள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். |
4. | பெப்ஸி, கோலா, கேம்பா போன்ற சோடா வகை பானங்கள் பிராக்கெட்டின் ஒட்டும் தன்மையை பாதிக்கும். அதனால் இப்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். |
5. | பிக்ஸட் கம்பியின் ஏதேனும் பாகம் உடைந்து விட்டால் அவற்றை மருத்துவரை அடுத்தமுறை பார்க்க வரும் பொழுது கொண்டு வரவேண்டும். |
6. | கம்பி உடைந்து கன்னத்திலோ அல்லது நாக்கிலோ குத்தினால் அவற்றை எடுக்க முயற்சிக்க வேண்டாம். கம்பி அழுத்தும் இடத்தில் சிறு பஞ்சை வைத்துக் கொள்ளவும். உங்கள் பல் மருத்துவரிடம் விபரத்தை தெரிவிக்கவும். |
7. | முன் பல் சேதம் ஏற்படுத்தும் விளையாட்டுகளை (குத்துச் சண்டை, கூடைப்பந்து) தவிர்க்கவும். |
|
|
|
|
ஈறு நோய் வராமல் தடுக்கும் முறைகள் |
A - |
தினமும் காலை, இரவு இருவேளையும் பல் துலக்குதல். |
B - | ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் வாய் கொப்பளித்தல். |
C - | கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி பல் இடுக்குகளை சுத்தப்படுத்துதல். |
| 1. |
ப்ளாஸ் எனும் நூல் |
| 2. | பல் இடுக்குகளை சுத்தப்படுத்த பிரத்தியோகமாக உள்ள சிறிய பிரஷ். |
| 3. | ப்ளாஸ்டிக்கால் ஆன மெல்லிய, கட்டையான வளையக்கூடிய பல்குத்தி |
| 4. | பாட்டில் கழுவும் பிரஷ் போன்ற தோற்றமுடைய சிறிய அளவு பிரஷ். |
| 5. | சிரின்ஞ் மூலம் தண்ணீரை பல் இடுக்குகளில் பாய்ச்சுதல். |
| 6. | மின்சாரத்தால் இயங்கும் பிரஷ். |
|
|
பற்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் |
1. | மேல் தாடைப்பற்களைப் பிடுங்கினால் கண் பார்வை பாதிக்கப்படும்.
இது தவறான எண்ணம். பல் எடுப்பதற்கும் கண் பார்வைக்கும் சம்பந்தமில்லை. |
2. | கடுமையாக அழுத்தித் தேய்த்தால் பற்கள் வெண்மை ஆகும்.
கடுமையாக நீண்ட நேரம் தவறான முறையில் பல் துலக்குவதால் பற்கள் தேய்ந்து போகும். சிறிது நேரம் சரியான முறையில் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பல் துலக்குதலை கடைபிடித்தாலே பற்களில் உள்ள உணவுத் துணுக்குகள் முற்றிலுமாக அகற்றப்படுகிறது. |
3. | வயதானால் பற்கள் விழுந்து விடும்.
பற்களைச் சுற்றி ஊத்தையும், பற்காரையும் அகற்றப்படாததினால் ஈறு நோய் உருவாகிறது. இந்த ஈறுநோயின் காரணமாகப் பற்கள் இழப்பு ஏற்படும். சரியான பற்சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு பற்கள் கடைசி காலம் வரை உறுதியாகவும் வலுவாகவும் இருக்கும். |
4. | பல் மருத்துவரிடம் பல் சுத்தம் செய்வதால் பற்கள் ஆடி விழுந்து விடும்.
நம்முடைய பற்கள் ஈறுகளினாலும், பல் எலும்பினாலும் சூழ உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது. பல் சுகாதாரம் சரியாகக் கடைப் பிடிக்கப்படவில்லையெனில், பற்காரை உருவாகி ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதலுக்குக் காரணமாகிவிடும். பற்காரையை முறையாக பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்வதால் பற்கள் ஆடுவது போலவும் தோன்றும், இடைவெளி விழுந்தது போலவும் தோன்றும். ஆனால் பற்காரையை அகற்றுவது பல்லைச் சுற்றியுள்ள ஈறு, எலும்புகளைப் பலப்படுத்தி பல் நீண்ட நாள்நிலைத்து இருக்க உறுதுணையாக இருக்கும். ஆகவே பல் மருத்துவரிடம் 6 மாதத்திற்குஒரு முறை பற்களை சுத்தம் செய்வது மிக அவசியம். |
5. | கை விரல்களினாலும், பற்பொடி கொண்டும் பல் துலக்குவது பற்பசை கொண்டு பல் துலக்குவதைக்காட்டிலும் சிறந்தது.
பல் துலக்கும் பிரஷ்சில் உள்ள குஞ்சம் பற்களில் படிந்துள்ள ஊத்தையும், பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்களையும் அகற்றுகிறது. பல் துலக்கும் பிரஷ் பற்களின் எல்லா பகுதிகளையும் எளிதில் சென்றடைந்து சுத்தம் செய்யும். ஆனால் கை விரல்கள் பிரஷ் போல பல்லின் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்யாது. கை விரல்கள் பல் ஈறுகளை மசாஜ் செய்ய மட்டுமே உதவுகிறது. |
6. | வாய் துர்நாற்றத்தை அகற்றுவதில் வாய் கொப்பளிக்கும் திரவமும் மின்ட் சாக்லேட்டுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பற்சிதைவு, ஈறு வீக்கம் புகைப்பிடித்தல் மற்றும் பல் சம்பந்தமான நோய்கள் இவற்றின் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. வாய் கொப்பளிக்கும் திரவம் வாய் துர்நாற்றத்தை ஓரளவு நீக்குமே தவிர முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. மற்றும் பல் மருத்துவரிடம் சென்று முறையாக சிகிச்சையும் அவசியம். |
7. | வலி எடுக்கும் பல்லின் அருகே ஆஸ்பிரின் மாத்திரையை வைத்தால் பல்வலி குறையும்.
வலி எடுக்கும் பல் அருகே வைக்கப்படும் எந்த ஒரு வலி நிவாரணியும் பல் வலியைக் குறைக்காது உண்மையில், அப்படி வலி நிவாரணியை பல் அருகே வைப்பது ஆபத்தானது. வலி நிவாரணி பற்களைச் சுற்றியுள்ள உயிருள்ள திசுக்களுக்கு எரிச்சல் உணர்வைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். |
8. | பல் சிகிச்சை எப்போதும் வலி மிகுந்தது.
பெரும்பாலான பற்சிகிச்சை பற்களை மரத்துப் போகச் செய்து சிகிச்சை அளிப்பதனால் வலியில்லாமல் செய்யப்படுகிறது. பல் மருத்துவத்தில் பயன்படும் கருவிகள் நுட்பமானவை, ஆகையால் அவை குறைந்த அதிர்வுகளையே ஏற்படுத்தும். ஆதலால் பற்களுக்கு அதிக சிரமமின்றி வலி இல்லாமல் இருக்கும்.
|
|
|
|
|
பல் எடுத்த பிறகு பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் |
1. | பல் எடுத்த இடத்தை தொந்தரவு செய்யக் கூடாது
பல் எடுத்த இடத்தை நாக்கை வைத்தோ, விரல் கொண்டோ தொந்தரவு செய்தால் கிருமித தாக்குதல் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படும். அந்த இடத்தில் பஞ்சினை 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரைஅழுத்தி வைத்திருக்கவும். குறைந்தது 24 மணி நேரத்திற்கு பல் எடுத்த பக்கத்தின் எதிர் பக்கத்தினால் தான் உணவை மெல்ல வேண்டும்.
|
2. | எச்சில் துப்புதல், வாய் கொப்பளித்தல்
பல் எடுத்த பின்பு, 24 மணி நேரத்திற்கு எச்சில் துப்புவதோ, வாய் கொப்பளிக்கவோ கூடாது. பல் மருத்துவரின் அறிவுரைப்படி 24 மணி நேரத்திற்குப் பின்னர் குளிர்ந்த வெதுவெதுப்பான உப்பு நீராலோ அல்லது கிருமிகளைக் கட்டுப்படுத்தும் திரவத்தை வைத்தோ வாயை சுத்தம் செய்யலாம். |
3. | உணவு
பல் எடுத்த அன்று குளிர்ந்த தண்ணீரையோ அல்லது இதர குளிர்ந்த நீராகாரங்களான தயிர், மோர், ஐஸ்கிரீம், கூல் டிரிங்ஸ், கஞ்சி, குழைந்த சாதம், ரொட்டி, பால் போன்றவைகளை சாப்பிட வேண்டும். பல் எடுத்த 3 நாட்களுக்கு சூடான உணவு சாப்பிடக் கூடாது. |
4. | வலி
பல் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், கொஞ்சம் வலியோ, அசெளகரியமோ இருக்கலாம். பல் மருத்துவர் வலியையும், வீக்கத்தையும் கட்டுப்படுத்த வலி நிவாரணி, கிருமியை கட்டுப்படுத்த மாத்திரை கொடுப்பார். அதை உட்கொள்ள வேண்டும். பல் மருத்துவர் கூறும் அறிவுரைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். மறுபடியும் வலி தொடர்ந்தால் பல் மருத்துவரை உடனே அணுகவும். |
5. | வீக்கம்
சில நேரங்களில் பல் எடுத்த இடத்தில் வலியும், வீக்கமும் இருக்கலாம். அதை மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணி, கிருமிகளை கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஐஸ் ஒத்தடம் கொடுப்பதனால் நிவாரணம் பெறலாம். |
6. | பல் தேய்த்தல்
பல் எடுத்த அன்று பல் எடுத்த இடத்தில் ஒரு நாளைக்கு பற்களை பிரஷ் கொண்டு துலக்க கூடாது. பின்னர் இரண்டாவது நாளிலிருந்து பல் எடுத்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் மெதுவாக பிரஷ் கொண்டு துலக்கலாம். |
7. | புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதனால் பல் எடுத்த இடம் ஆறுவதில் அதிக தாமதம் ஏற்படும். |
|
|
ஈறுகளை பற்றிய உண்மைகள் |
1. | ஆரோக்கியமான ஈறுகள்
நம் பற்களைச்சுற்றி ஈறுகளும் பல் பாதுகாப்பு திசுக்களும் எலும்புகளும் உள்ளன. பொதுவாக நம் பற்களுக்கும் அதனைச் சுற்றியுள்ள ஈறுகளுக்கும் உள்ள இடைவெளி 3MM அல்லது அதனினும் குறைந்ததே ஆகும். Gingival Sulcus என்கிறோம். இது 'v' வடிவத்தில் காணப்படுகிறது.
|
2. | Plague (ஊத்தை)
பற்களை தினமும் சரியாக பிரஷ்சை வைத்து தேய்க்காவிட்டால் பற்களின் மேல் பகுதிகளிலும், பற்களின் இடுக்குகளிலும் பழுப்பு நிறக்கலரில் மாவு போல் உணவுப்பொருட்கள் படிந்து கொள்ளும் இதைத்தான் பிளாக் என்று கூறுகிறோம். இவைதான் பின்பு பல் சொத்தையாவதற்கும் ஈறுநோய் வருவதற்கும் (ஈறுகளில் இரத்தம் கசிதல்) அடிப்படைக் காரணம் ஆகும். |
3. | Calculus (பற்காரை)
சுத்தம் செய்யப்படாத ஊத்தை (பிளாக்) வெகு நாட்களாய் சேர்ந்து கடினப்படுகிறது.இதை பிரஷ் செய்யும் போது நீக்க முடியாது. பல் மருத்துவரால் நீக்கப்பட வேண்டியவை. |
4. | ஈறு நோய்
பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையேயான இடைவெளியிலும் பல்லின் மேலும் பிளாக் மற்றும் Calculus படிவதால் ஈறு நோய் வருகிறது. |
5. | ஈறு நோயின் முதல் அறிகுறி
ஈறு நோயின் முதல் அறிகுறி ஈறு சிவந்திருத்தலும், இரத்தக் கசிதலும் இது வலியோடோ, வலியில்லாமலோ வரலாம். இந்த ஆரம்ப நிலை முழுக்க, முழுக்க சரி செய்யக் கூடியதே ஆகும். பின்பு ஈறு சுழற்சி, ஈறுகளில் வலி, வீக்கம் வாய் துர்நாற்றம் ஆகியவை தோன்றுகிறது. அதன்பிறகு பற்களுக்கும், ஈறுகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து ஆழமாகிறது. இதையே பெரியோடான்டல் பாக்கெட் (Peridontal Pocket) என்கிறோம். இதன் உள்ளே மேலும் மேலும் உணவுத்துகள்கள் அடைந்து, தீவிரமடைந்து பல்லைச் சுற்றியுள்ள எலும்பு பாதிப்படைக்கிறது. இந்த பாதிப்பினால் ஈறுகள் இறங்குதல், சீழ் வடிதல் மற்றும் பல் ஆடுதல் மற்றும் பல் இழப்பு உண்டாகிறது. |
|
|
|
|
பற்களைப் பற்றி சில தவறான கருத்துக்கள் பல் சுத்தம் செய்தல் பற்றி |
தவறு |
1. | எனாமல் தேய்ந்து விடும். |
2. | பல் கூச்சம் ஏற்படும். |
3. | பற்களிடையே இடைவெளி அதிகமாகும். |
4. | ஈறுகள் இறங்கி விடும். |
5. | பற்கள் வலுவிழந்து ஆடிவிடும். |
|
சரி |
1. | பல் சுத்தம் செய்வதால் எனாமல் சிறிதும் பாதிப்படையாது. ஏனெனில் பல் சுத்தம் செய்வது என்பது Ultrasonic / அதிர்வலைகள், Piezotronic / காந்தஅலைகள், Air / காற்றாலைகள் ஆகியவற்றை பயன்படுத்தி காரையை அகற்றுவது தானே தவிர பற்களை தேய்ப்பதோ, உரசுவதோ அல்ல. நீர், காற்று மற்றும் அதிர்வுகளின் மூலமே பல் சுத்தப்படுத்தப்படுகிறது. |
2. | ஏற்கனவே உடைந்தோ, தேய்ந்தோ கூச்சம் ஏற்பட்ட பற்களில் சற்று கூச்சம் அதிகமானது போல் தோன்றுமே தவிர பல் சுத்தம் செய்வதனால் மட்டும் கூச்சம் ஏற்படாது. |
3. | பற்களிடையே உள்ள இடைவெளியில் காரை படிந்து இடைவெளி இல்லாதது போல் காட்சியளிக்கும். அந்தக் காரை பற்களை சுற்றியுள்ள ஈறினைக் கரைத்துக் கொண்டே இருக்கும். அதனால் இடைவெளி பெரிதாகிக் கொண்டே இருக்கும். அந்த இடைவெளியில் உள்ள காரை நீங்கியவுடன் ஈறு இறங்கியது போலவும், இடைவெளி உருவானது போலவும் தோன்றும். அது காரையினால் ஏற்பட்டதே அன்றி பல் சுத்தம் செய்வதனால் அல்ல.. |
4. | பற்காரை என்பது கிருமிகளால் ஆன படிவமே தவிர பற்களுக்கு வலு சேர்ப்பது அல்ல. பற்களின் மேல் படிந்த காரை முதலில் ஈறினைக் கரைத்து பின்பு பற்களைச் சுற்றியுள்ள எலும்பினைக் கரைக்கும். அதனால் பல்லைச் சுற்றியுள்ள இடைவெளி அதிகமாகி அதில் மேலும் மேலும் காரை படிந்து பிடிமானம் இல்லாததால் பல் ஆடத்துவங்கி பின் விழுந்துவிடும். ஆகவே பற்கள் ஆடத்துவங்குவது காரை படிந்ததாலே தவிர சுத்தம் செய்வதால் அல்ல. ஆகவே 6 மாதத்திற்கொரு முறை பல் சுத்தம் செய்தல் மிகவும் அவசியமாகும். அதனால் இழப்பினைத் தடுக்கலாம். |
|
|
|